“சென்னையை புயல் உலுக்கும்”

நெல்லை பா.சுரேஷ் முருகன்'s photo.
நெல்லை பா.சுரேஷ் முருகன் with நெல்லை கே.டி.துரை and 9 others.

இந்து மதம் மூட நம்பிக்கைன்னு பேசும் மூடர்களே!

“சென்னையை புயல் உலுக்கும்”
பயங்கர மழை பெய்யும் என்று எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன முனிவர்கள் சொன்ன பஞ்சாங்கம்…

கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை கோடி நஷ்டங்கள் தவிர்த்திருக்கலாம்…

அது என்ன ???

நவம்பர் 22-ம் தேதி சென்னையை புயல் உலுக்கும் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று செய்திகள் ஏற்கனே வெளியாயின.

ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச் சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர்.

அப்படிப்பட்ட பஞ்சாங்கம் இருவகைப்படும். முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது ‘வாக்கிய பஞ்சாங்கம்’. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவது ‘திருக்கணித பஞ்சாங்கம்’.

இதில், வாக்கிய முறை பஞ்சாங்கத்தை பல்வேறு ஜோதிடர்களும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவ்வாறு வெளியான ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.

இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகின்ற நவம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் அன்றே சொன்னது…

இந்நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் மழை வந்து மதராசபட்டினம் என்ற சென்னையை நாசமாக்கி விட்டது.
ஆனாலும் இந்த நிமிடம் வரை மழையும் நின்றபாடில்லை.

பஞ்சாங்கம் நம்புவது திராவிட கொள்கையில் இல்லை என்று அரசாங்கம் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மறுத்தது .

பஞ்சாங்கத்தை நக்கல் அடித்த வாய்கள் இன்று இறுக்க மூடிக்கொண்டு விட்டன.

இதில் கொடூரத்தின் உச்சம் என்ன வென்றால் பஞ்சாங்க வாதிகள் சொன்னதை பல பத்திரிக்கைகள் 17.11.2015 அன்று வெளியிட்ட பொதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.ஆதாரம் இதோ

http://www.vikatan.com/…/55148-storm-will-shake-chennai-pan…

அன்று தமிழனின் அறிவை நக்கல் அடித்த வாய்கள் எல்லாம் இன்று மூடிக்கொண்டு விட்டன.

நம் ஆதி தமிழனின் அறிவினை இன்றைய தமிழர்கள் உணர வேண்டும்.

இன்றைய அறிவியலால் புயல் மழை வருவதை ஒரு வாரத்திற்கு முன்பு வேண்டுமானால் சொல்ல முடியும்.ஆனால் ஒரு வருடத்திற்கு முன்போ எவ்வளவு மழை பெய்யும் என்பதையோ சொல்ல முடியாது என்பதை மழை நிபுணர் ரமணன் வெளிப்படையாகவே சொன்னார்.

வெள்ளக்காரன் கண்டு பிடித்த இந்த அறிவியலை தான் சிறந்தது என்றும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு வானியல் நிகழ்வுகளை கணித்த தமிழன் விஞ்ஞான அறிவியலை இந்து மதத்தோடு இணைத்து மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி விட்டார்கள் இந்த பகுத்தறிவு பேசும் முட்டாள்களும் திராவிட கும்பல்களும் மதசார்பற்ற தன்மை பேசும் மூடர்களும்…

வெள்ளக்காரன் தான் அறிவாளி என்று தமிழன் கொடி பிடிக்கிறான்…
இது மகா கேவலம். ஆனால்

அந்த வெள்ளகார கிறிஸ்துவர்கள் இந்தியாவில் இருந்து திருடி சென்ற தமிழனின் அறிய ஓலை சுவடிகளையும் கல்வேட்டுக்களையும் நவ பாசன சிலைகளையும் எடுத்து சென்று ஆராய்கிறான். அதில் உள்ள குறிப்புகளை எடுத்து பல கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி அவன் பெயரை போட்டுக்கொள்கிறான்.

சிதம்பரம் நடராஜர் கோவில்களில் இருந்து வெள்ளைக்கார கிறிஸ்துவர்கள் திருடி சென்ற ஓலை சுவடிகள் கணக்கில் அடங்காது.

இன்டர்நெட் மெயில் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாத்துரை பல ஆண்டுகாலம் போராடி காப்புரிமை வாங்கினான்.அவர் தன் அடுத்த பார்வையை தமிழனின் சித்தமருத்துவத்தில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழா உன் ரத்தத்தில் இன்னும் அந்த ஆதிகால திறமை இன்னும் இருக்கிறது.பொதி தர்மர் போல நம் பழைய உணர்வை தட்டும் கண்டுபிடிப்புகள் வரவேண்டும்.

இந்து மதம் மூட நம்பிக்கை இல்லை என்பதை உணரும் அரசாங்கமும் தமிழனின் பழைய விஞ்ஞானத்தை வளர்க்கும் விதமான கல்வி திட்டத்தை கொண்டு வரும் அரசாங்கமும் வேண்டும். சிறுபான்மை ஒட்டு வங்கியை நம்பி அரசியல் நடத்தும் திராவிட அரசியல் தமிழ் மண்ணை விட்டு அழிந்து போக வேண்டும்.

இந்து மத விஞ்ஞானம் எதிர்காலத்தை சொல்லும் விஞ்ஞானம்…
கட்டுக்கதை அல்ல…
நாம் கற்கவேண்டியது
இன்னும் நிறைய உள்ளது.

ஆனால் ஒன்று சொல்லுவேன்
50 வருட திராவிட ஆட்சியின் கேவலமான தரத்தை இந்த மழை காட்டிகொடுத்துவிட்டது. திராவிடம் தமிழ் மண்ணை விற்று தின்றதன் விளைவு இன்று தண்ணீரில் மிதக்கிறான்.
காமராஜரை போல் ஒரு இந்திய உணர்வுள்ள தமிழன் ஆட்சிக்கு வரும் வரை தமிழ்நாடு உருப்படுவது கஷ்டமே.

காலம் பதில் சொல்லும்…

நன்றி PNP தமிழ்நாடு…

நெல்லை பா.சுரேஷ் முருகன்®™

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s